எந்த யாத்திரை சென்றாலும் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது:  தமிழ்நாடு காங் கமிட்டி ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் பேச்சு..

இராமநாதபுரம், ஆக.13 – இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவரும், கே.ஆர்.ராமசாமி பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராமநாதபுரம் பார்லிமென்ட் தொகுதிக்குட்பட்ட பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருச்சுழி, அறந்தாங்கி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் பூத் கமிட்டிகளை செம்மைபடுத்த வேண்டும். காங்., தலைமை வேட்பாளராக யாரை நிறுத்தினாலும், கூட்டணி கட்சி வேட்பாளராக யாராக இருப்பினும் 100 சதவீத வெற்றிக்கு அயராது உழைக்க வேண்டும். இளம் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவி நீக்கம் ரத்து செய்யப்பட்டபின் அவர் மிகவும் சந்தோஷமாக உள்ளார்.  பாஜகவின் பிடியில் இருந்து 2024 நாடாளுமன்ற தேர்தல் காங். கூட்டணி வெற்றி மூலம் மக்களுக்கு விடுதலை பெற்றுத்தர காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கு அனைவரும் உழைக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் வலுவான கூட்டணியாக உள்ளது. பாஜகவில் இணைந்த இளைஞர்கள் தற்போது, அதிலிருந்து விலகி வருகின்றனர்.  எந்த யாத்திரை சென்றாலும் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது. இவ்வாறு அவர் பேசினார். திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் இராம.கருமாணிக்கம்,மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்ட பொருளாளர் கோபால (எ) பிஆர்என் ராஜாராம் பாண்டியன் , தேசிய மீனவர் காங் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் வேலுச்சாமி, மாவட்ட துணைத்தலைவர் துல்கீப் கான் ஆகியோர் பேசினர்.

சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் வாணி இப்ராஹீம்,  திருவாடானை வட்டாரத் தலைவர்கள் தட்சிணா மூர்த்தி,  கணேசன், ஆர்.எஸ்.மங்கலம்  வட்டாரத் தலைவர்கள் மனோகரன், சுப்ரமணியன், தொண்டி பேரூர் தலைவர் காட்டுராஜா, ராமநாதபுரம் வட்டார தலைவர் காருகுடி சேகர், மண்டபம் மேற்கு வட்டார தலைவர்  திருப்புல்லாணி கிழக்கு வட்டாரத் தலைவர் சேதுபாண்டியன், மேற்கு வட்டாரத் தலைவர் கந்தசாமி, மாநில செயலர் ஆளந்தகுமார், திருவாடானை வட்டார மகளிர் காங் தலைவி சசிகலா, ராமநாதபுரம் நகர் தலைவர் கோபி உள்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட பொதுச்செயலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!