!ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் அதிகமாக விற்கப்படுகிறது என, தொடர்ந்து புகார் வந்ததையடுத்து இன்று காலை கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் தலைமையில் அனைத்து கடைகளுக்கும் திடீர் ஆய்வை மேற்கொண்டார். மேலும் புகார் கூறப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு நடத்தியதில் அந்த பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது அம்பலமானது. இதனையடுத்து அந்தப் பகுதிகளில் இருந்த கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை, குட்கா பொருட்களை பறிமுதல் செய்த கடை உரிமையாளர் மீது கைது நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.மாவட்ட மதுவிலக்கு ஆயத் தீரவு கோட்ட ஆய அலுவலர் முருகேசன் கீழக்கரை துணை வட்டாட்சியர் பரமசிவம் கீழக்கரை நகராட்சி ஆய்வாளர் பரகத்துல்லா மற்றும் வருவாய் துறையினர் காவல் துறையினர் உடன் இருந்தனர்



You must be logged in to post a comment.