பனைக்குளம் கிராம வேளாண் முன்னேற்றக் குழு விவசாயிகளுக்கு விதை நேர்த்தி பயிற்சி…

இராமநாதபுரம், ஆக.26-

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டார வேளாண்மை துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் பனைக்குளம் கிராம வேளாண் முன்னேற்றக் குழு விவசாயிகளுக்கு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விதை நேர்த்தி பயிற்சி நடந்தது. கிராம வேளாண் முன்னேற்றக் குழு விவசாயிகளின் செயல்பாடுகள், நோக்கங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டங்கள், மானியம்,  விதை நேர்த்தி குறித்து  திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குநர்  அமர்லால் செயல்விளக்கம் அளித்தார். நேரடி நெல் வரிசை விதைப்பு பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துகள், உயிர் உரங்களின் பயன்பாடு, ஊட்டம்மேற்றிய தொழு உரம் தயாரித்தல் குறித்து  வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன், பிரதமரின் கிசான் திட்டத்தின் நன்மை, செயல்பாடு குறித்துதிருப்புல்லாணி வேளாண்மை உதவி அலுவலர் பழனி விளக்கம் அளித்தனர். ஒழுங்குமுறை விற்பனை கூட செயல்பாடுகள், கொப்பரை கொள்தல் செய்தல் வணிக துறையின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு நலத்திட்டங்கள் குறித்து வேளாண் விற்பனை வணிகம் உதவி வேளாண்மை அலுவலர் கிருத்துவநேசன், தோட்டக்கலை துறையின் கீழ் செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள் குறித்து திருப்புல்லாணி உதவி தோட்டக்கலை அலுவலர் ரஞ்சித் பேசினர். விவசாயிகளின் சந்தேகங்களுக்கு வேளாண் அலுவலர்கள் விளக்கமளித்தனர். உதவி தொழில் நுட்ப மேலாளர் ஜோசப், உதவி வேளாண்மை அலுவலர் பழனி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!