தவறான முறை தரும் விரைவான வெற்றி நீடிக்காது: கீழக்கரை செய்யது ஹமீதா கலை கல்லூரி மேலாண்மை கருத்தரங்கில் தகவல்..

இராமநாதபுரம், ஆக.6- இராமநாதபுரம் மாவட்டடம்  கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேலாண்மை துறை சார்பில் தொழில் முனைவோர் மேம்பாட்டு கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் சீ. ராஜசேகர் தலைமை வகித்தார். மேலாண்மை துறை தலைவர் அஜ்மல் கான் வரவேற்றார்.

ஒரு தொழில் முனைவோர் தங்கள் தொழிலில் மற்றவர்களுக்கு உதவி செய்து அவர்களை வெற்றியடையச் செய்ய முன்வர வேண்டும். சரியான திட்டம், உத்தி தொழில் முனைவோருக்கு முக்கியமானது. உங்கள் தொழிலில் எப்போதும் நேர்மையாக இருங்கள். ஒரு தவறான முறை தரும் விரைவான வெற்றி நீடிக்காது. வணிகம் என்பது உங்கள் எண்ணத்தை விற்பனை செய்வதாகும். உங்கள் தயாரிப்பு, யோசனையை மக்கள் விரும்பினால், தானாகவே அதை வாங்குவர். சரியான விளம்பரம், நல்ல வணிக உத்தியின் கவனம் ஆகியவற்றால் ஒரு நாள் நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள் என  அழகப்பா பல்கலை., கள ஒருங்கிணைப்பாளர் அருமை ரூபன் பேசினார். பேராசிரியர் ரியாஸ் கான் நன்றி கூறினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!