இராமநாதபுரம் : மத்திய, மாநில எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு கருத்தரங்கு ராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்டத்தலைவர் எஸ். கர்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வெ.கா.சேக்கிழார் தொடக்க உரை ஆற்றினார். அமைப்பாளர் எம்.சோமசுந்தரம், பொருளாளர் கே.பாபு, செய்தி தொடர்பாளர் சி.தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பட்டியல் வகுப்பினர் வன்கொடுமை தடுப்புச்சட்டம், பதவி உயர்வில் இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிறுவனத்தலைவர் ச.கருப்பையா, மாநில துணைத் தலைவர்வி.பாலச்சந்திரன் மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெ.மரியம் ஜேம்ஸ், சங்க மாநிலத்தலைவர் (டாஸ்மாக்) வேலு. செல்வக்குமாரர், மக்கள் கூட்டமைப்பு மாநில மைய நிர்வாகி எம்.மாடசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாவட்ட செய்தி துணை தொடர்பாளர் எம்.சுரேஷ், மாவட்ட இணை செயலாளர்கள் எஸ்.வீரக்குமார், எம். பாண்டியராஜன், திருவாடானை பொறுப்பாளர் எஸ்.ஜீவானந்தம் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் டி.ரங்கநாயகி, ஜெ.அன்னக்கிளி, மாவட்ட நிதி செயலாளர் ஏ.ராமர், மாவட்ட துணை அமைப்பாளர்கள் பி.மாதவன், கே.கர்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பதவி உயர்வில் இடஒதுக்கீடு தொடர்பாக பொறியாளர்கள் தி.குருதிவேல் மாறன், செ.ஜெயதுரை, பா.ராஜேந்திரன், பேராசிரியர்கள் கே.ராமகிருஷ்ணன், ஜி.சந்திரசேகர், கே.ஜெயமுருகன், மருத்துவர் எஸ்.பிரசாத் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
பட்டியல் வகுப்பினர் வன்கொடுமைத் தடுப்பு சட்டம் குறித்து சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் பயிற்சி அளித்தார். ராமநாதபுரம், பரமக்குடி வட்டார பொறுப்பாளர்கள் ஆர்.அழகுக்குமார், ந.பூப்பாண்டி, ஆர்.போது ராஜா ஆகியோர் கருத்தரங்கு நெறியாளர்களாக பணியாற்றினர்.மக்கள் கூட்டமைப்பு, மாவட்டத்தலைவர்,மு.அழகேசன் நன்றி கூறினார்.
You must be logged in to post a comment.