சோழவந்தான் அருகே கருப்பட்டியில் அமைச்சர் உதயநிதியை தவறாக பேசிய  சாமியார் உருவ பொம்மையை திமுகவினர் தீ வைத்து எரித்து கண்டனம்..

சோழவந்தான் செப்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டியில் திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பண்ணைசெல்வம் தலைமையில் திமுகவினர் வட இந்திய சாமியாரின் உருவ பொம்மையை எரித்து அவருக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். சமீபத்தில் வட இந்திய சாமியார் ஒருவர் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தவறாக பேசியும் அவரது தலையை வெட்டுவதற்கு 10 கோடி ரூபாய் பரிசளிப்பதாகவும் பேசியிருந்தார். அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருப்பட்டி நூலகத்திலிருந்து அவரது உருவ பொம்மையை சுமந்து ஊர்வலமாகச் சென்று தீ வைத்தனர். அவருக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் கிளைச் செயலாளர்கள் செல்லப்பாண்டி, காசி, ராமராஜன், ஊராட்சி துணைத் தலைவர் பிரியா சேகர், மணிகண்டன் ,பாண்டி ,மாவட்டம் பிச்சை, பேச்சு சக்திவேல் முருகன் ஒர்க் ஷாப் கண்ணன் திலீபன் மற்றும் திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!