ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் மாணவ மாணவியர் விடுதிகளில் துப்புரவு பணியாளராக பணியாற்ற 30 பேர் தேர்வு செய்யப்பட்டு, கடந்த 2013 ஆம் ஆண்டு தொகுப்பூதியம் ரூபாய் 2000 மும், அதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு ரூபாய் 4200 வும் சிறப்பு கால முறை ஊதியம் விகிதம் வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் அதன் பிறகு தங்களது ஊதியம் உயர்த்தப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் பள்ளி விடுதிகளும், கல்லூரி விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. இவ்விடுதிகளில் 100 மாணவ, மாணவிகளுக்கு மேல் தங்கி படிக்கும் 66 விடுதிகளுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தில் முழு நேர துப்புரவு பணியாளர்களும், 100 மாணவ, மாணவிகளுக்கு குறைவாக உள்ள விடுதிகளில் 2 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பகுதிநேர தூய்மை பணியாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் தொகுப்பூதியம் பின்னர் ₹3 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
அதேநேரத்தில் பகுதி நேர பணி என்றாலும் இவர்களின் பணி நேரம் மாலை வரை நீடித்து விடுவதால் இவர்கள் வேறு பணிகளுக்கும் செல்ல இயலாமல் பொருளாதாரரீதியில் சிரமப்படுவதன் அடிப்படையில் அவர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க கடந்த பல ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும்,புகாராக மனு அளித்தும் தங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், கடந்த அதிமுக ஆட்சியின் போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் நியமிக்கப்பட்ட நாங்கள், அவர்கள் மறைவிற்குப் பிறகு எடப்பாடியார் ஆட்சி காலத்தில் சிறப்பாக அனைத்து கோரிக்கையிலும் நிறைவேற்றப்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் நாங்கள் தொடர்ந்து முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்களுக்கு போதிய ஊதியம் வழங்கப்படுவதில்லை எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் எங்களுக்கு குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ செலவுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு
குடும்பங்கள் வறுமை நிலையில் உள்ளது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு இரண்டு பணியாளர்கள் ஏற்கனவே இறந்துவிட்டனர். 2023 ஆம் ஆண்டு தொகுப்பூதிய பணியாளர்கள் 25 நபர்கள் உள்ளனர்.அவர்களில் சீர்மரபினர் விடுதியில் பணிபுரிபவர்களுக்கு கடந்த ஏழு மாதமாக ஊதியமும் வழங்கப்படவில்லை. எனவே, மீதி உள்ள பணியாளர்களுக்காவது உரிய நேரத்தில் ஊதியம் வழங்கி எங்களை வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடியா திமுக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
You must be logged in to post a comment.