.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் சேந்தினி செல்லும் சாலையில் பிரிவு சாலை சுமார் 200 மீட்டர் தூரத்தில் தீ அணைப்பு மீட்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. புதிதாக கட்டப்பட்ட இந்த நிலையத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்ட போதே தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் தற்போது ஆங்காங்கே சாலை முற்றிலும் சேதமடைந்து மண்சாலையாக
மாறிவிட்டது.சாலை மோசமாக இருப்பதால் அவசர காலங்களில் பாதிப்பிற்குள்ளாகும் இடத்திற்கு
உரிய நேரத்தில் செல்ல இயலாத அவலநிலையுடன் இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர். இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
You must be logged in to post a comment.