அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி.அதிமுக பிரமுகரை கைது செய்ய வலியுறுத்தி உசிலம்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட வர்கள் புகார்..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த அதிமுக கட்சி பிரமுகரான டிக்கா சேதுராமன் மகன் ராஜ சிவப்பிரகாஷ் .இவர் புரோக்கர்கள் மூலம் கடந்த 2018ல் தமிழக முழுவதும் பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் ஒவ்வொருவரிடமும் ரூ5 லட்சம் முதல் ரூ7 லட்சம் வரை என தமிழகம் முழுவதும் 195 பேரிடம் சுமார் ரூ 7 கோடி வரை பணம் பெற்றுள்ளார்.சிலருக்கு பணி நியமன ஆணையையும் வழங்கியுள்ளார்.பணியில் சேரச்சென்ற போதுதான் அது போலியானது எனத் தெரிய வந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட 195 பேரும் மதுரை எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். போலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இன்று பணத்தை திருப்பித் தருவதாக கூறி அனைவரையும் உசிலம்பட்டி க்கு வரவழைத்துள்ளார்.அனைவரும் உசிலம்பட்டி வந்து அவர் வீட்டில் பார்த்த நிலையில் வீடு பூட்டப்பட்டிருந்த்து.

இதனால் பாதிக்கப்பட்ட அனைவரும் தங்களிடம் மோசடி செய்த ராஜ சிவ பிரகாஷை கைது செய்ய வலியுறுத்தி உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லுவிடம் மனுக்கள் ஆக எழுதி வழங்கினார்கள்.இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக டிஎஸ்பி நல்ல உறுதியளித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!