சனாதனத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த உதயநிதி உட்பட 62 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் புகார்..

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதனை நடிகர்கள் இயக்குனர்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட பலரும் இவருடைய கருத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதனால் இந்துக்களையும்,சனாதனம் குறித்தும் புண்படுத்தி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட 62 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் வேதா என்பவர் தலைமையில் 5க்கும் மேற்பட்டோர் மதுரை மாவட்டம் பேரையூர் அருகே டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!