திமுக தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் தென்காசி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..

திமுக தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் தென்காசி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்த சாமியாரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என திமுக வழக்கறிஞர் அணி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியை சேர்ந்த அயோத்திராம் காட்டின் ஆச்சார்யா பீடத்தின் தபஸ்வி சாவனியின் மஹந்த் ஜெகத்குரு சாமியார் பரமஹன்ஸ ஆச்சார்யா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்திட, தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே. ஜெயபாலன் அறிவுறுத்தலின் பேரில் தென்காசி காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளர் கே.எஸ். பாலமுருகனிடம் தென்காசி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் அந்த சாமியாரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று புகார் மனு ஒன்றை அளித்தனர். இந்நிகழ்வில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி  அமைப்பாளர் எஸ். தங்கராஜ் பாண்டியன் தலைமையில், மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் ஜாபர் ஹனீப், மாவட்ட துணை அமைப்பாளர்கள் ரகுமான் சதாத், காளிராஜ் மற்றும் கழக வழக்கறிஞர்கள் முத்து குமாரசாமி, ராஜா, கதிரவன், சொக்கலிங்கம், சண்முக மணிகண்டன் மற்றும் பொன் லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!