அரசு ஊழியர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு வீடியோ பரப்பிய 2 பேர் மீது வழக்குப்பதிவு..

மதுரை ஆரப்பாளையம் புட்டுத்தோப்பு பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் மனைவி கார்த்திகேயி. இவர் மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் நல திட்ட களப்பணியாளர் ஆக உள்ளார்.

இந்தநிலையில் கார்த்திகேயியும் சக ஊழியர் பார்வதியும் கென்னட் மெயின் ரோடு காந்திஜி காலனியில் கர்ப்பிணி பெண் மற்றும் குழந்தையிடம் விசாரணை நடத்திக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு 2 பேர் வந்தனர். அவர்கள் கார்த்திகேயி உடன் தகராறில் ஈடுபட்டனர். இது மட்டுமின்றி கார்த்திகேயி விசாரணை அம்சங்களையும் வீடியோ எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த 2 பேரும் பேஸ் புக் சமூக வலைதளத்தில் கார்த்திகேயி விசாரணை வீடியோவை வெளியிட்டு, “இவர்கள் 2 பேரும் திருட்டு கும்பல்” என்று பதிவு செய்து உள்ளனர்.

இது தொடர்பாக கார்த்திகேயி எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயி தொடர்பாக அவதூறு செய்திகளை சமூகவலைதளத்தில் வெளியிட்ட 2 குற்றவாளிகளையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!