அறுபடைவீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தினமும் காலை 5.30 மணிக்கு நடக்கும் முதல் தரிசனத்திற்கு சிறப்பு கட்டணம் ரூ 50 செலுத்தும் பக்தர்களை மட்டும் தரிசனம் செய்ய அனுமதிப்பதோடு பொது தரிசனம் (கட்டணமில்லாமல் ) தரிசிக்க செல்லும் பக்தர்களை பூட்டிவிட்டு ஆராதனை முடிந்த பின்பு, அதாவது கட்டண தரிசன பக்தர்கள் தரிசித்து முடிந்த பின்பே திறந்து விடும் நிலை பலநாட்களாக இருந்தது.
இதனால் பல பக்தர்கள் சரியாக தரிசனம் செய்ய முடியாமல் மிகவும் வேதனையுற்றனர். மதுரை சேர்ந்த செ.கார்த்திகேயன் இன்று தனது குடும்பத்துடன் தரிசிக்க சென்ற போது இதை நிலையில் சிரமத்தையும், வேதனையையும் சந்தித்தார். இது சம்பந்தமாக கோயில் நிர்வாக ஊழியரிடம் காரணம் கேட்ட போது இங்கு கட்டணம் கொடுப்பவருக்கு மட்டுமே முன்னுரிமை” நீ யாரிடம் வேண்டுமானாலும் கூறிக்கொள்” என ஒருமையில் திமிராக கூறியுள்ளார்.
இந்த நிகழ்வின் அடிப்படையில் உடனடியாக நேற்று காலை 11.00 மணியளவில் கோவில் நிர்வாகத்தின் துணை ஆணையரிடம் நடவடிக்கை எடுக்ககோரி எழுத்து பூர்வமாக புகார் தெரிவித்ததோடு பத்திரிக்கையாளர்களையும் சந்தித்து இந்த மிக முக்கிய மக்கள் பிரச்சனையை எடுத்து கூறப்பட்டது.
.மேலும் கோயில் நிர்வாகமும் நாளை, அதாவது இன்று (19/06/2019) முதல் சிறப்பு தரிசனத்திற்கு கதவு திறக்கும் போது, பொது தரிசனத்திற்கும் கதவை நேரம் போல் திறந்து விடுகிறோம் என உறுதியளித்தனர். ஆனால் உறுதியளித்தபடி எதுவும் நடக்காமல் அதே நிலையே தொடர்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா??.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









