19.11.18 முதல் 25.11.18 வரை “தொல்பொருள் பாதுகாப்பு வார விழாவையொட்டி மரபுச்சின்னங்கள் / தொல்பொருள்கள் குறித்து மாணவ, மாணவியர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் ஓவியம். வினாடி வினா போட்டிகள் நடந்தது. இதில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது
தொல்லியல் துறை காப்பாட்சியர் பா.ஆசைத்தம்பி வரவேற்றார். அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் வி.சிவக்குமார் முன்னிலை வகித்தார். இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுரு பரிசு வழங்கினார். தொல்லியல்துறை இளநிலை பொறியாளர் ந.பிரபா நன்றி கூறினார். தொல்லியல் அலுவலர்கள் நீ.முத்துக்கருப்பு, முருகன், முனியசாமி விழா ஏற்பாடுகளைச செய்தனர்.
வினாடி வினா போட்டி : ராமநாதபுரம் புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இதய சர்மிதா முதலிடம், ஞான நிவேதா 2 ஆம் இடம், திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ச.சந்திராஸ்ரீ 3 ஆம் இடம் பெற்றனர்.
ஓவியப் போட்டி : 9-10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில் பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி மானவி செ.ஆர்த்தி முதலிடம், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஜாஸ்மின் 2 ஆம் இடம் பெற்றனர். 6-8 வகுப்பு பிரிவில் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஜனார்த்தனன் முதலிடம், கார்த்திகேயன் 2 ஆம் இடம், புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி மு.சகிலா தேவி 2 ஆம் இடம் பெற்றனர். இந்து வித்யாலயா நர்ஸரி&பிரைமரி பள்ளி மாணவர்கள் பவிஸ்ரீ, அம்ரிதா, தர்ஷிகா, நிவாஸ், கீர்த்தனா ஆகியோர் சிறப்பு பரிசு பெற்றனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










