லடாக்கில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு கவர்னர் சிறப்பு நிதி ரூ.20 லட்சம் இன்று வழங்கப்பட்டது…

இந்திய-சீன எல்லை கிழக்கு லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ ஹவில்தாரான தமிழக வீரர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடுக்களூர் காளிமுத்து மகன் பழனி உள்பட 20 பேர் வீர மரணம் எய்தனர்.

சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட பழனி உடல் முழு ராணுவ மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க 18.6.2020 காலை நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழக அரசு சார்பில் ரூ. 20 லட்சத்திற்கான நிதி காசோலையை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், பழனி மனைவி வானதி தேவியிடம் ஜூன் 18.6.2020ல் வழங்கினார். இதனையடுத்து பழனியின் குடும்பத்தினருக்கு தமிழக ஆளுநரின் நேர்முக உதவியாளர் அஜய் பி.எஸ்.ரத்தோர் நேரில் இன்று (23.6.2020) ஆறுதல் கூறினார். கவர்னர் சிறப்பு நிதி ரூ.20 லட்சத்திற்கான காசோலை வழங்கினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!