கீழக்கரை அருகே விபத்தில் பலியான தாய், மகள் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்..

இராமநாதபுரம், ஆக.26 – இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை முஹமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி அருகே ஆக. 14ல் சாலை விபத்து ஏற்பட்டது. இதில் சின்ன மாயாகுளம் விவேகானந்தபுரத்தைச் சேர்ந்த பார்வதி, இவரது மகள் குப்பம்மாள் ஆகியோர் இறந்தனர். இருவரின் குடும்ப பொருளாதார சூழ்நிலையை கருதி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இருவரின் குடும்பத்தக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.  இதனை தொடர்ந்து மாயாகுளம் விவேகானந்தபுரம் பார்வதி, குப்பம்மாள் இல்லத்திற்கு மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோர் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து முதலமைச்சர் பொது நிவாரண நிதி தலா ரூ.2 லட்சத்திற்கான காசோலைகளை அவரது குடும்பத்தாரிடம் வழங்கினர். ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் ஆர்.கே.கார்மேகம், கீழக்கரை வட்டாட்சியர் எஸ். பழனிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!