இராமநாதபுரம், ஆக.15- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை விவேகானந்தபுரத்தைச் சேர்ந்த குப்பம்மாள், இவரது மகள் பார்வதி ஆகிய இருவரும் சதக் பாலிடெக்னிக் கல்லூரி எதிரே பஸ் நிறுத்தத்தில் நேற்று (14/08/2023) மாலை நின்று கொண்டிருந்தனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்ற அரசு விரைவு பேருந்து இவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இருவரின் குடும்ப பொருளாதாரம் குறித்து அறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் அறிவித்து உத்தரவிட்டார்.



You must be logged in to post a comment.