ராமநாதபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் ராமநாதபுரம் தாலுகா குழு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தினர். எளிய மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை கைவிடு, மின்சாரத் துறையை அரசே தொடர்ந்து நடத்திடுக, தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் மாதம்தோறும் மின் அளவு கணக்கிடும் முறையை நடைமுறைபடுத்திடுக’ என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டது. இதில் ராமநாதபுரம் தாலுகா குழு பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.