சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு பாடல்கள் வெளியீடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 24வது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்.2-6 தேதிகளில் நடைபெறுகிறது. இதனையொட்டி கவிஞர் யுகபாரதி எழுதி, காம்ரேட் கேங்ஸ்டா குழுவினரின் இசைகோர்வையில், தம்மா தி பேண்ட் குழுவினர் பாடிய மாநாட்டு முன்னோட்ட பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒலிபேழை வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. ஒலிப்பேழையை கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, இயக்குநர் ராஜூ முருகன், காம்ரேட் கேங்ஸ்டா தினேஷ், ஆர்.ஜே.பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
You must be logged in to post a comment.