தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முப்பெரும் விழா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு 100 வது ஆண்டையும், கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் நல்லகண்ணு அவர்களின் 100வது பிறந்தநாள் விழாவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுப்பெரும் தலைவர் கே, டி. கே, தங்கமணி நினைவு நாளையொட்டியும் முப்பெரும் விழாவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாநகர குழு சார்பில் தஞ்சை பேருந்து நிலையத்தில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி தலைமை வகித்தார்.

 கல்யாணி , ஏ.கே சுந்தர், காதர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர், மனோகரன், கண்ணன், செந்தில்குமார் ,ஜெயபால், சுரேஷ், மாநகர செயலாளர் வடிவேலன், மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம்பூபதி ,காங்கிரஸ் கட்சி சார்பில் வயலூர் ராமநாதன், மக்கள் நீதி மையத்தின் தர்ம சரவணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் ,அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் வீரமோகன், பாஸ்கர், தஞ்சை மாநகர செயலாளர் முத்துக்குமரன் ,ஒன்றிய செயலாளர் குணசேகரன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற தஞ்சை மாநகர செயலாளர் உமர் நன்றி உரை கூறினார்.

முன்னதாக கே .டி .கே .தங்கமணி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழாவையொட்டி பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

செய்தி….ஏ. கேசுந்தர், தஞ்சாவூர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!