கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் “முதலாம் ஆண்டு மாணவர்கள் வகுப்புகள் துவக்க விழா” கல்லூரி இயக்குநர். ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லா தலைமையிலும், கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மைதீன் மற்றும் கல்லூரி டீன் முனைவர் முஹம்மது ஜஹாபர் முன்னிலையிலும் நடைபெற்றது.

கல்லூரி ஆங்கிலத்துறை துணைப் பேராசிரியர் ரேகா அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் தனது வாழ்த்துரையில் நடந்து முடிந்த 2016-2017 கல்வி ஆண்டில் எங்கள் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி இராமநாதபுரம் மாவட்டத்தில் முதலிடமும், மதுரை மண்டல அளவில் இரண்டாவது இடமும் பெற்றுள்ளது என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தற்பொழுது எங்கள் கல்லூரி கட்டிடத்தின் கட்டமைப்பு மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் கல்லூரியிலுள்ள ஒவ்வொரு துறையும் சிறந்த துறை தான் எங்கள் கல்லூரியை தேர்வு செய்த ஒவ்வொருவரையும் பாராட்டுகிறேன். நீங்கள் படிக்கும் நான்கு ஆண்டுகளில் ஒவ்வொரு மாணவர்களும் தங்களுடைய அறிவுத்திறனை மேம்படுத்தியும், தங்களுடைய தனித்திறனை வளர்த்தும், தாங்கள் எண்ணிய குறிக்கோளை அடைவதற்கு விடாமுயற்சியுடன் பாடுபட்டால், நாளைய சமுதாயத்தில் வெற்றியாளர்களாக உருவாகிஇ உங்கள் வீட்டிற்கும்இ நாட்டிற்கும் பெருமை சேர்க்கலாம் என தெரிவித்தார்.

கல்லூரியின் ஒவ்வொரு துறைத் தலைவர்களும் தங்களது துறையின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் மூலமாக கிடைக்கக் கூடிய வேலைவாய்ப்புகள் பற்றி மிகச் சிறப்பாக எடுத்துரைத்தனர். வேதியியல் துறை துணைப் பேராசிரியர் கிரிஜா நன்றியுரை வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி வேதியியல் துறைத் தலைவர் முனைவர் தாவீது ராஜா, இயற்பியல் துறைத் தலைவர் ஷேக்பரீத் மற்றும் கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் நஜீமுதீன் ஆகியோர் செய்திருந்தனர்.


Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









