கரூரில் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட வழக்கில் 5 நபர்களை கைது செய்த போலீசார் கரூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கரூரில் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட வழக்கில் 5 நபர்களை கைது செய்த போலீசார் கரூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


கரூர் தாந்தோணிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் BA வரலாறு மூன்றாம் ஆண்டு படித்து வரும் அரவக்குறிச்சி வட்டம்,அம்மாபட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி நேற்று மதியம் ராயனூர் பொன் நகர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சக மாணவிகளுடன் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது நந்தகோபால் என்பவர் ஆம்னி காரில் கடத்தி சென்றது தொடர்பாக மாணவியின் சகோதரி பெரியநாயகி என்பவர் அளித்த புகாரின் பேரில் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவுப்படி இரண்டு காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் இரண்டு காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பவம் நடைபெற்ற பகுதியை சுற்றியுள்ள CCTV Camera பதிவு, செல்போன் எண்களை ஆய்வு செய்த பின்பு திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுகா, கோடங்கிபட்டியில் நந்தகோபாலின் பாட்டி பொன்னம்மாள் என்பவர் வீட்டில் பதுங்கியிருந்த நந்தகோபால் மற்றும் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி இரவு மீட்கப்பட்டார்.

பின்னர் கடத்தப்பட்ட மாணவியிடம் விசாரணை மேற்கொண்டதில் நந்தகோபால் என்பவர் கடந்த ஒரு வருடமாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளதும், இருவருக்கும் மணமுடிப்பது தொடர்பாக பேசி வந்ததாகவும், அதற்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் தெரிகிறது. அதனால் கோபமடைந்த நந்தகோபால் தன் நண்பர்களுடன் சேர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கடத்தல் வழக்கில்
1.நந்தகோபால்,
2.கலா (நந்தகோபால்-அம்மா), 3.கருப்பசாமி (நந்தகோபால்-நண்பர் (மாருதி ஆம்னி ஓட்டுநர்),
4.பழனிச்சாமி (நந்தகோபால்-நண்பர்) 5.சரவணன் (நந்தகோபால்-நண்பர்) ஆகியோர்களை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய மாருதி ஆம்னி காரும் மீட்கப்பட்டு அனைவரும் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர். மேலும் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி அவரது உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!