திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த செ.நாச்சி பட்டு கிராமத்தில் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் உரத்த சிந்தனை 10ம் ஆண்டு பாரதி உலா 2024 நிகழ்வு கல்லூரி தாளாளர் அக்ரி. எஸ் .வெங்கடசலபதி தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி இயக்குனர் ரேகா ரெட்டி, உரத்த சிந்தனை பொது செயலாளர் உதயம் ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் முன்னதாக கல்லூரி முதல்வர் செந்தில் முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பேச்சரங்கம் மற்றும் கவியரங்கம் பாரதியார் குறித்து பல்வேறு தலைப்புகளில் நடைபெற்றது நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரன் கலந்து கொண்டு கவியரங்கம், பேச்சரங்கம் ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவர் மற்றும் மாணவியரகளுக்கு உரத்த சிந்தனை சார்பில் சான்றிதழ் வழங்கி பாராட்டினார் அவர் பேசுகையில் கல்லூரி மாணவர்கள் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.புத்தகங்கள் அந்தந்த படிப்பு குறித்த அறிவை மட்டுமே தரும். நம் தவறுகளைக் களைந்து, திறன்களை மேம்படுத்த வேண்டுமானால் அதற்கு பாடப் புத்தகத்தை தாண்டிய அறிவு அவசியம். அத்தகைய பல்திறன் சார்ந்த அறிவினை வழங்குபவைகள்தான் புத்தகங்கள். வாழ்க்கைக்குத் தேவையான அறிவையும், உயர்நிலையில் இருப்பவர்கள் அந்த நிலையை அடைவதற்கு என்ன செய்தார்கள் என்பதையும், பின்னடைவைச் சந்தித்தவர்கள் எவ்வாறு மேலெழுந்தார்கள் என்பதையும் அறிந்து கொள்வது மிக அவசியம் . நமக்கு அருகில் நடக்கும் புத்தகத் திருவிழாவிற்கு சென்று அங்கு புத்தகங்களை வாங்கி வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் அனைத்து வகை தேர்வுகளையும் எதிர்கொள்ள முடியும் என்பதுடன் உயர் பதவியையும் எட்ட முடியும். என்று பேசினார் நிகழ்வில் மாவட்ட தமிழ் சங்கத் தலைவர் பா.இந்திரராஜன், ஆன்மீக சொற்பொழிவாளர் ம.தனஞ்செயன், சென்னை சந்திரசேகர் பவுண்டேஷன் நிறுவனர் மாம்பலம் சந்திரசேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் அனைத்து துறை கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர் நிகழ்வை உரத்த சிந்தனை அமைப்பாளர் சண்முகம் சிறப்பாக தொகுத்து வழங்கினார் நிகழ்ச்சியின் முடிவில் கணித பேராசிரியர் நன்றி கூறினார்

You must be logged in to post a comment.