போதையில் அசூர வேகத்தில் வாகனத்தை ஓட்டி விபத்துக்குள்ளாக்கிய கல்லூரி பேருந்து ஓட்டுநர்.. பயணிக்கும் மாணவிகளுக்கு அபாயத்தை உருவாக்கும் வேகம்..

இராமநாதபுரத்தில் இருந்து செய்யது ஹமீதா கலை கல்லூரி வாகனத்தை உச்சப்புளியை சேர்ந்த ராமமூர்த்தி கல்லூரி வாகனத்தை ஓட்டி வந்தார். கீழக்கரை அருகே உள்ள பாலையாரம் அருகில் வந்த போது நிலை தடுமாறி முன்னாள் சென்று கொண்டிருந்த டாடா மேஜிக் வாகனத்தில் மோதி பின்னர் அந்த வழியாக சென்ற இரு சக்கர வாகனத்திலும் மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக சிறு காயத்துடன் உயிர் தப்பினார்கள்.

சம்பவ இடத்திற்கு சார்பு ஆய்வாளர் பாதம்பிரியா மற்றும் கீழக்கரை சார்பு ஆய்வாளர் வசந்த் மற்றும் காவலர்கள் வேகமாக வாகனத்தை ஓட்டி வந்த ஓட்நரை பிடித்து விசாரணை நடத்தயதில் அந்த டிரைவர் குடிபோதையில் உள்ளது தெரியவந்தது. உடனடியாக கல்லூரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

2 thoughts on “போதையில் அசூர வேகத்தில் வாகனத்தை ஓட்டி விபத்துக்குள்ளாக்கிய கல்லூரி பேருந்து ஓட்டுநர்.. பயணிக்கும் மாணவிகளுக்கு அபாயத்தை உருவாக்கும் வேகம்..

  1. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு யார் பொறுப்பு.மதுவருந்தும் மிகப்பெரிய சமுதாயத்தை உருவாக்கிய அரசாங்கமே!! .இறக்கைகள் கட்டி பறக்கும் கல்லூரி பேருந்துகள் (இதில் பாலிடெக்னிக் மற்றும் இன்ஜினியரிங் காலேஜூம் அடக்கம்)பாலைநிலத்தில் கீழக்கரை ராமநாதபுரம் ECR சாலையில் நின்று பார்த்தால் சோழவரம் ரேஸ் கோர
    சில் நிற்பதுபோன்ற ஒரு உணர்வு நமக்கு ஏற்படும் அளவிற்க்கு வேகம் இந்த பேருந்துகளை முந்திசெல்ல மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் மூன்று மூன்றுபேராக ஆபத்தான பயணம்.இதெல்லாம தெரிந்தும் மாணவர்களின் மீது அக்கறையில்லாத கல்லூரி நிர்வாகம்.கல்லூரி வாகனத்தில்தான் பாதுகாப்பான பயணமாக இருக்கும் என்று நினைத்து தன் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோருக்கு கல்லூரி நிர்வாகம் என்ன பதில் சொல்லபோகிறது அசம்பாவிதங்கள் எதுவும் நடந்தால் !!!

  2. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு யார் பொறுப்பு.மதுவருந்தும் மிகப்பெரிய சமுதாயத்தை உருவாக்கிய அரசாங்கமே!! .இறக்கைகள் கட்டி பறக்கும் கல்லூரி பேருந்துகள் (இதில் பாலிடெக்னிக் மற்றும் இன்ஜினியரிங் காலேஜூம் அடக்கம்)பாலைநிலத்தில் கீழக்கரை ராமநாதபுரம் ECR சாலையில் நின்று பார்த்தால் சோழவரம் ரேஸ் கோர
    சில் நிற்பதுபோன்ற ஒரு உணர்வு நமக்கு ஏற்படும் அளவிற்க்கு வேகம் இந்த பேருந்துகளை முந்திசெல்ல மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் மூன்று மூன்றுபேராக ஆபத்தான பயணம்.இதெல்லாம தெரிந்தும் மாணவர்களின் மீது அக்கறையில்லாத கல்லூரி நிர்வாகம்.கல்லூரி வாகனத்தில்தான் பாதுகாப்பான பயணமாக இருக்கும் என்று நினைத்து தன் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோருக்கு கல்லூரி நிர்வாகம் என்ன பதில் சொல்லபோகிறது அசம்பாவிதங்கள் எதுவும் நடந்தால் !!!

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!