தமிழகத்தின் தலைசிறந்த விஞ்ஞானி, பத்ம பூசண் விருது பெற்ற ரஞ்சன் ராய் டேனியல் நினைவு நாள் இன்று (மார்ச் 27, 2005).

ரஞ்சன் ராய் டேனியல் கன்னியாகுமாி மாவட்டத்தில் நாகர்கோவிலில் ஆகஸ்ட் 11, 1923ல் பிறந்தார். இவர் தனது தொடக்கப்பள்ளியை ஸ்காட் கிறிஸ்தவ பள்ளியில் பயின்றார். ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி போன்ற கல்லூரிகளில் இளநிலை இயற்பியல் பயின்றார். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர் சி வி ராமன் அவர்களின் தாக்கத்தால் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முதுகலை இயற்பியல் பயின்றார். மேலும் டாட்டா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டார்.நோபல் பரிசு பெற்ற சீன விஞ்ஞானிகள் இணைந்து ஆராய்ச்சி மேற்கொண்டு காஸ்மிக் கதிர்கள் போன்ற அறிவியல் துறைகளில் முக்கிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி உள்ளார். இந்தியா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தில் விஞ்ஞானியாக பணிக்கு சேர்ந்த இவர் பிரபஞ்ச இயற்பியல் மற்றும் விண்வெளி இயற்பியல் துறைகளில் பணி புரிந்தார். 1976 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தி ஆலோசகராகவும் பணியாற்றினார். ஆராய்ச்சியின் தந்தை என்று புகழப்படும் ஹோமி ஜஹாங்கீர் பாபா அவர்களுடன் இணைந்து பிரபஞ்சத்தில் கதிாியக்கக் கதிர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக ஆலோசகர், உலக நாடுகளுக்கான விண்வெளி ஆராய்ச்சி ஆலோசகர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்காஸ்மிக் கதிர்கள் குறித்த அடிப்படை அறிவியல் மற்றும் பொறியியலுக்கான பங்களிப்பிற்காக 1992ம் ஆண்டில் இந்திய அரசு அவருக்குப் பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது. தமிழகத்தின் தலைசிறந்த விஞ்ஞானி ரஞ்சன் ராய் டேனியல் மார்ச் 27, 2005ல் தனது 81வது வயதில் நாகர்கோவிலில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!