அண்டவியலிலும் பொதுச் சார்பியல் கோட்பாட்டிலும் ஆய்வு மேற்கொண்ட இயற்பியலாளர் விளாதிமிர் அலெக்சயேவிச் பெலின்சுகி பிறந்த தினம் இன்று (மார்ச் 26, 1941).

விளாதிமிர் அலெக்சயேவிச் பெலின்சுகி (Vladimir Alekseyevich Belinski) மார்ச்சு 26, 1941ல் இரஷ்யாவில் பிறந்தார். இவர் அண்டவியலிலும் பொதுச் சார்பியல் கோட்பாட்டிலும் ஆய்வு மேற்கொண்டார். இவர் இலாண்டவு கோட்பாட்டு இயற்பியல் நிறுவனத்தில் எவுகனி இலிஃப்சிட்ஜுடன் பணிபுரிந்தார். இவர் அப்போது இலேவ் இலாண்டவு, இலிஃப்சிட்ச் இருவரும் எழுதிய கோட்பாட்டு இயற்பியல் படநூலின் இரண்டாம் தொகுதியில் சில இயல்களை எழுதினார். இவர் தன் முதுமுனைவர் பட்டத்தை 1980ல் இலாண்டவு கோட்பாட்டு இயற்பியல் நிறுவனத்தில் பெற்றார்.அண்மையில் இவர் உரோம் நகரச் சப்னாப் பல்கலைக்கழக அணுக்கருப் பிளவு தேசிய நிறுவனத்தில் பேராசிரியருக்கு இணையான பதவியை வகிக்கிறார். அங்கு இவர் பொதுச் சார்பியல் கோட்பாடு பற்றிப் பாடம் நட்த்துகிறார். இவர் சகாரோவுடன் இணைந்து பெலின்சுகி-சகாரோவ் உருமாற்றியத்தைக் 1978ல் கண்டறிந்தார். இது கரும்புள்ளிகள் ஈர்ப்புச் சாலிட்டான்களின் ஒரு சிறப்புவகையே என நிறுவியது. குறிப்பிட்த் தகுந்த இவரது பங்களிப்பு BKLவழுநிலை/தனிமைப் புள்ளி BKL கருதுகோள் ஆகும். இது வழுநிலைக்கு அருகில் ஐன்சுடைனின் புலச் சமன்பாடுகளின் தீர்வுகளின் நடத்தையை விளக்குகிறது. இக்கருதுகோள் எண்ணியற் கணிப்புகளால் உறுதியாகியது.ஐன்சுடைனின் ஈர்ப்புப் புலச் சமன்பாடுகளுக்கு BKLவழுநிலை/தனிமைப் புள்ளி எனும் அண்டத் தனிமைப் புள்ளி அமைந்த, அலைவியல்பும் தற்போக்கு வாய்ப்பியல்புப்பான்மையும்” கொண்ட பொதுத் தீர்வைக் கண்டுபிடித்த்தற்காக இவர் மார்சல் கிராசுமேன் விருது (2012) மற்றும் ரஷ்ய அகாடமி ஆஃப் சயின்ஸின் லாண்டவு பரிசு (1974) பெற்றார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!