அனில் காகோட்கர் (Anil Kakodkar) நவம்பர் 11, 1943ல் மத்தியபிரதேசத்தில் உள்ள பர்வானியில் பிறந்தார். இவரது பெற்றோர் கமலா காகோட்கர் மற்றும் புருசோத்தம் காகோட்கர் ஆவர். இவர்கள் இருவரும் காந்தியவாதிகள் ஆவர். பள்ளிப்படிப்பை பர்வானி மற்றும் மும்பையில் முடித்தார். கல்லூரிப்படிப்பை மும்பை ரூபாரேல் கல்லூரியில் பயின்றார். மேலும் 1963ல் பொறியியலில் இயந்திரவியல் பிரிவில் பட்டம் பெறுவதற்காக மும்பை வீரமாதா ஜிஜாபாய் தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்தார். அனில் காகோட்கர் 1964ல் மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் சேர்ந்தார். பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் அணுஉலை பொறியியல் பிரிவில் காகோட்கர் சேர்ந்தார். முற்றிலும் உயர் தொழில்நுட்பத் திட்டமான துருவா அணு உலை வடிவமைப்பிலும் கட்டுமானத்திலும் இவர் முக்கியப்பங்கு வகித்தார். 1974 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட அமைதிக்கான அணுசக்தி சோதனைகளின் முக்கிய குழுவில் இவரும் ஒருவராக இருந்தார்.
அனில் காகோட்கர் இந்தியாவின் அழுத்தப்பட்ட கனரக நீர் அணு உலை தொழில் நுட்பத்தின் உள்நாட்டு வளர்ச்சி திட்டங்களை வழிநடத்தியுள்ளார். கல்பாக்கத்திலுள்ள இரண்டு அணு உலைகள் மற்றும் ஒரு கட்ட்த்தில் கைவிடப்படுவதாக இருந்த ராவத்பாட்டாவில் உள்ள முதல் அலகு ஆகிய அணு உலைகளைப் புணரமைத்ததில் இவரது பங்கு மகத்தானது. 1996 ஆம் ஆண்டில் அவர் பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராகவும், 2000 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் அணு சக்தி ஆணையத்தை முன்னெடுத்து வருபவராகவும் இந்திய அணுசக்தித் துறையின் செயலாளராகவும் இருந்து வருகிறார். 250 எண்ணிக்கைக்கு மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகளை இவர் வெளியிடுள்ளார். குறிப்பாக மலிவான தோரியம் வளங்களை அணு ஆற்றலுக்கான எரிபொருளாக பயன்படுத்துவதில் இந்தியா தன்னிறைவு அடைமுடியுமென இவர் தீவிரமாக நம்பினார். புளூட்டோனியத்தால் இயங்கும் தோரியம்-யுரேனியம் 233 தனிமங்களை தொடக்கநிலை அணு ஆற்றல் மூலமாகப் பயன்படுத்தும் மேம்பட்ட கன நீர் அணு உலை வடிவமைப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். எளிமையான ஆனால் பாதுகாப்பான தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட தனிப்பட்ட உலை அமைப்பு மூலமாக தோரியத்தில் இருந்து 75 சதவிகித மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும். காகோட்கர் பல கமிஷன்கள் மற்றும் பிற அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார். இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பம்பாய் – 2006-15 ஆளுநர்களின் குழு தலைவர். அணு சக்தி ஆணையத்தின் உறுப்பினர், ஓஎன்ஜிசி எரிசக்தி மையம் அறக்கட்டளையின் உறுப்பினர், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐஐடி)சீர்திருத்தங்கள் மீது அதிகாரம் கொண்ட குழுவின் தலைவர், சர்வதேச அணுசக்தி எரிசக்தி அகாடமி மற்றும் உலக கண்டுபிடிப்பு அறக்கட்டளையின் கெளரவ உறுப்பினர் ஆகியவற்றில் இவர் உறுப்பினராக உள்ளார். பத்மஸ்ரீ விருது (1998), பத்ம பூசன் (1999), பத்ம விபூசன் (2009), மஹாராஷ்டிரா மாநிலம்-மகாராஷ்டிரா பூஷண் விருது (2012), கோவா மாநில-கோமண் விபுஷான் விருது (2010), ஹரி ஓம் ஆசிரமம் விக்ரம் சாராபாய் விருது (1988), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான எச்.கே. ஃபைரோடியா விருது (1997), தொழில்நுட்பத்தில் சிறப்புக்கான ராக்வெல் பதக்கம் (1997), அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த பங்களிப்பிற்கான FICCI விருது (1997-98), ANACON – 1998 அணு ஆய்விற்கான வாழ்நாள் சாதனை விருது, இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கத்தின் H.J. பாபா மெமோரியல் விருது (1999-2000), ஹோமி பாபா வாழ்நாள் சாதனையாளர் விருது (2010), வராகமிர் நிறுவனத்தின் ஆச்சார்யா வராகமிர் விருது (2004) போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Like this:
Like Loading...
Related
You must be logged in to post a comment.