வரலாற்று ஆய்வாளர், எழுத்தாளர், பேராசிரியர் முனைவர் என்.எம்.நம்பூதிரி நினைவு நாள் இன்று (30 மார்ச் 2017).

என்.எம். நம்பூதிரி (Neelamana Madhavan Nampoothiri) கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புலியூர் நீலமனா இல்லத்தில் ஏப்ரல் 17, 1943ல் பிறந்தார். இளநிலை இயற்பியல், மலையாளம் முதுநிலை ஆகிய பட்டப்படிப்புகளுக்கு பிறகு, முனைவர் கெ.ஏ. எழுத்தச்சன் மற்றும் டாக்டர் சி.பி. அச்சுதனுண்ணி ஆகியோரின் வழிகாட்டுதலில் இடப்பெயர் அடிப்படையில் கோழிக்கோடு (Toponomy) என்ற விஷயத்தில் முனைவர் பட்டம் பெற்றார். செங்ஙன்னூர் கிறிஸ்தவ கல்லூரி, தலச்சேரி அரசு பிரண்ணன் கல்லூரி, கோழிக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோழிக்கோடு மாலைக் கல்லூரி, பட்டாம்பி அரசு ஸமஸ்கிருத கல்லூரி ஆகிய கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.

கேரளாவில் முதன்முதலாக இடப்பெயர்களின் மூலம் (Toponomy) கோழிக்கோடு நகரத்தின் வரலாற்றை ஆய்வு செய்தார். கோழிக்கோடு சாமூதிரி மன்னர் பரம்பரையின் ஓலைச்சுவடிகளை கண்டெடுத்து ஆய்வு செய்தார். நிளா ஆற்றுப்படுகை (பாரதப்புழா) ஆய்வு என கேரளாவின் வரலாற்று, சமூக, பரிணாமங்கள் குறித்து வெகு விமரிசையாக ஆய்வுகளை மேற்கொண்டார். 1993-ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ஹெர்மன் குண்டர்ட் மாநாட்டில் பங்கேற்றார்.

தமிழக மற்றும் கேரள வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி சிறீ புன்னச்சேரி நீலகண்ட சர்மா நினைவு அரசு ஸமஸ்கிருத கல்லூரியில், மலையாளம் முதுகலைப் படிப்பு பிரிவின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றார்.கேரள வரலாறு குறித்த ஆங்கில குறும்புத்தகம் எழுதியுள்ளார். என்.எம். நம்பூதிரி மார்ச் 30, 2017ல் ஆலப்புழாவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!