மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள கிராமப்பகுதியான வகுரணி, நாட்டாமங்கலம்ää நல்லத்தேவன்பட்டி, பெருமாள்கோவில்பட்டி போன்ற பகுதிகளில் வேளாண்மைத்துறை சார்பில் வளர்ச்சி திட்ட பணிகளை மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் பார்வையிட்ட ஆய்வு செய்தார். பின்பு நல்லத்தேவன்பட்டியில் மதிப்புகூட்டு இயந்திரம் மான்யமாக ரூ10.00லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்.
பின்பு பயிறு உடைக்கும் இயந்திரம், எண்ணெய் பிழியும் இயந்திரங்கள் சரியான முறையில் செயல்படுகிறதா என ஆய்வு செய்தார். இது போன்று உசிலம்பட்டி உழவர் உற்பத்தியாளர் குழுவிலிருந்து 9பவர் வீடர் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார் .இந்த ஆய்வில் வேளாண்மைத்துறை வளர்ச்சி திட்ட அதிகாரிகள் உசிலம்பட்டி தாசில்தார் நவநிதகிருஸ்ணன், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி:- மோகன், உசிலம்பட்டி


You must be logged in to post a comment.