இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8.80 லட்சம் .மதிப்பில பேட்டரி கார் வழங்கும் நிகழ்ச்சி இன்று (15/02/2019) நடந்தது. மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், இராமநாதபுரம் மாவட்ட மக்கள் தரமான மருத்துவ வசதியை பெற்று பயனடையும் வகையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் சராசரியாக 1,500 நபர்கள் புற நோயாளிகளாகவும்,800 நபர்கள் உள் நோயாளிகளாகவும் மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இம்மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, டயலைசிஸ் சிகிச்சைப் பிரிவு, நியூராலஜி சிகிச்சைப் பிரிவு, மின்னொலி இதய வரைவு சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட அனைத்து சிகிச்சைப் பிரிவுகளுடன் அனைத்து தரப்பு மக்கள் நவீன மருத்துவ வசதிகள் பெற்று பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கைவிடப்படும் நோயாளிகள் இறுதியாக அரசு மருத்துவமனைகளை நம்புகின்றனர்.
இதனால், மித மிஞ்சிய மருத்துவ சேவை அரசு மருத்துவமனைகளில் தான் கிடைக்கிறது என்பதற்கு இது தக்க சான்றாகும் என்றார். மருத்துவமனை நோயாளிகள் வசதிக்காக ரூ.8.80 லட்சம் மதிப்பிலான பேட்டரி காரை அன்வர் ராஜா எம்.பி., அர்ப்பணிப்பு செய்தார். அவர் பேசுகையில், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஏற்கனவே ரூ.80 லட்சத்தில் மேம்பாட்டு பணி செய்யப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் பேவர்பிளாக் தளம், டி பிளாக் அருகில் அம்மா பூங்கா வளாகத்தில் ரூ.1.31 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள், 544 பள்ளிகளுக்கு ரூ.37.52 லட்சம் மதிப்பில் நூல்கள், 16 மாற்றுத்திறன் கொண்ட நபர்களுக்கு ரூ.9.28 லட்சம் மதிப்பில் இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இராமநாதபுரம் எம்பி., தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள், நாற்காலி, சாய்வு மேஜைகள், மின் விளக்குகள் உள்ளிட்ட வளர்ச்சி பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 5 கோடி வீதம் ரூ.25 .53 கோடி மதிப்பில் மக்கள் நல்வாழ்வு திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலும் வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். மருத்துவ நலப்பணி இணை இயக்குநர் முல்லைக் கொடி, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவகர்லால், மூத்த மருத்துவர் சாதிக் அலி, டாக்டர்கள் முகைதீன், ஞானக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணா துரை, பரமக்குடி நகராட்சி முன்னாள் உறுப்பினர் எம் ஏ.முனியசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print















