இராமநாதபுரத்தில் நடந்த தூய்மையே சேவை குறித்த அங்கன்வாடி பணியாளர்களின் பருந்து பார்வை காட்சியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பாராட்டினார்.
தூய்மையே சேவை குறித்த மாவட்ட அளவிலான மாணவ மாணவிகள் பங்கேற்ற கண்காட்சி மற்றும் கருத்தரங்கு ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக்., பள்ளியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்றது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்று பிளாஸ்டிக் ஒழிப்பு, மக்காத குப்பைகளை மறுசுழற்ச்சி முறையில் பயன்படுத்துவது, சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு குப்பைகளை அழிப்பது, திறந்த வெளியில் மலம் கழிப்பதால் உண்டாகும் தீங்கு குறித்து செயல் விளக்க கண்காட்சியில் தங்கள் படைப்புகளை சமர்ப்பித்தனர். நகர் புறங்களில் சுற்றுச்சூழலை பாதிக்கும் குப்பையை அகற்றுவது பற்றி கம்யூட்டர் மூலம் மாணவர்கள் விளக்கினர்.
இராமநாதபுரம் மாவட்டம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லா மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் தனிநபர் கழிப்பளை கட்ட மத்திய, மாநில அரசுகள் ரூ.12 ஆயிரம் நிதி வழங்கி வருவதாகவும், பிரதமர் மோடியின் தூய்மை பாரதம் இயக்கத்தை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பேசினார். தூய்மை ராமநாதபுரம் என்பதை குறிக்கும் விதமாக அங்கன்வாடி பணியாளர்களின் பருந்து பார்வை நிகழ்வில் ஆட்சியர் பங்கேற்று அனைவரையும் பாராட்டினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஹெட்ஸி லீமா அமலினி, முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் பிஎட் கல்லூரி சோமசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









