இராமநாதபுரத்தில் பொது தேர்தலுக்கான இயந்திரங்கள் சோதனை..

இராமநாதபுரம் மாவட்டத்தில் வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் சரி பார்ப்பு காகித தணிக்கை இயந்திரங்களை அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ச. நடராஜன் இன்று ஆய்வு செய்தார். ஐனவரி 1ல் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்ட சபை தொகுதிகளிலும் 5, 60, 410 ஆண் வாக்காளர்கள், 5, 61,726 பெண் வாக்காளர்கள் , மூன்றாம் பாலினத்தவர் 65 பேர் என 11, 22,201 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்நிகழ்வில் பா ஜ க மாவட்ட தலைவர் முரளிதரன், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு, அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சரவணன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் பஞ்சாட்சரம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!