தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடி நிவாரணத் தொகை..மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை…

கொரோனா ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 13.35 இலட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 ரொக்க நிவாரணத்தினை அவர்கள் வீட்டிலேயே சென்று வழங்க தமிழக முதல்வர் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்கள் அசல் தேசிய அடையாள அட்டை காண்பித்தும் அதன் நகலினை தங்களது கிராம நிர்வாக அலுவலரிடம் வீடுகளுக்கு வரும்போது சமர்பித்து அரசின் நிவாரணத்தொகை ரூ.1000-ஐ பெற்றுக் கொள்ளலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அடுத்து உள்ள வீரசிகாமணி கிராமத்தில் கோவிட்-19 நிவாரணத் தொகை வழங்குவதில் தாமதம் என்ற விபரம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு 03.07.2020 வெள்ளிக்கிழமை கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில்,தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண்சுந்தர் தயாளன், மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணத்தொகை விரைந்து வழங்கிட உத்தரவிட்டதை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கே சென்று நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. இதனால் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விரைந்து நிவாரணத் தொகை வழங்கிட உத்தரவிட்ட தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண்சுந்தர் தயாளன் அவர்களுக்கும், அதனை செயல்படுத்திய வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் வீரசிகாமணி கிராம மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் வீரசிகாமணி கிராம பகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு விரைந்து நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என கீழை நியூஸ் இணையதளத்தில் செய்தியும் வெளியிடப்பட்டிருந்தது. செய்தி வெளியிட்ட  கீழை நியூஸ் செய்தி நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!