இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஏர்வாடி ஊராட்சியில் ஆய்வு..

இராமநாதபுரம் மாவட்ட புதிய ஆட்சியராக  பொறுப்பேற்றுள்ள தினேஷ் பொன்ராஜ்  ஆலிவர் இ.ஆ.ப   இன்று (11/09/2020) ஏர்வாடி ஊராட்சியில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார்.  அதன் பின் ஏர்வாடியில்  குறுங்காடுகள் திட்டத்தின் கீழ்  சிறப்பாக பராமரிக்கப்பட்டு  வரும் மரங்களை  பார்வையிட்டார்.
இந்த வருகையின் பொழுது ஏர்வாடி ஊராட்சியின்  பல்வேறு தேவைகள் குறித்து ஏர்வாடி  ஊராட்சி மன்றத் தலைவர் KMV செய்யது அப்பாஸ் கோரிக்கை மனு அளித்தார். இறுதியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் ஆகிய  இருவரும் இனைந்து மரக்கன்று நட்டனர்.
செய்தி:- சுஜாத் அகமது

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!