இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் வட்டம் உப்பூர், வலமாவூர், திருப்பாலைக்குடி கிராம பகுதிகளை உள்ளடக்கி தலா 800 மெகாவாட் மின் உற்பத்தி 2 யூனிட், சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின் நிலையம் ரூ.12, 665 கோடி மதிப்பீட்டில் 2016ம் ஆண்டு ஜூலை மாதம் பணிகள் துவங்கப்பட்டது. நிர்மாண பணிகளை மேற்கொள்ள பாரத மிகு மின் நிலையம் (பெல்), லார்சன் அண்ட் டூப்ரோ (L&T), ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அனல் மின் நிலையத்தில் கொதிகலன் டர்பைன் மற்றும் ஜெனரேட்டர் நிர்மாண பணிகளை பெல் நிறுவனம், எஞ்சிய அனைத்து நிர்மாணப் பணிகள் பெல் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்பணிகளின் தற்போதைய நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் இன்று (25.10.2018) ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி மக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் உப்பூர் திட்ட தலைமை பொறியாளர் மாரிமுத்து , மேற்பார்வை பொறியாளர் சிவகுமார், உதவி வன பாதுகாவலர் ராஜ்குமார், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர்கள் சின்னையா, அல்லி, ஜெயசங்கரி, தமிழ்ச்செல்வன், வெங்கடேஸ்வரன், அதியமான், பெல் நிறுவன பொது மேலாளர் அன்பரசு, எல் அண்ட் டி நிறுவன நிர்வாக அலுவலர் ராம் வி ஆர்எஸ் மங்கலம் தாசில்தார் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.