மதுரை மாவட்டம், பாலமேட்டில் ஜனவரி 16 -ம் தேதியும்,அலங்காநல்லூரில் ஜனவரி 17-ம் ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள், அந்தந்த இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள ஜல்லிக்கட்டு வாடிவாசல், காளைகள் வெளியேறும் இடம், காளைகள், சேகரிக்கும் பகுதிகள், ஜேசிபி இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தும் பணியும் வாடிவாசல் உள்ளிட்ட பகுதிகளை வர்ணம் பூசும் பணி பார்வையாளர் மாடம் சீரமைப்பு போன்ற பல்வேறு பணிகள் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக துரிதமாக நடந்து வருகிறது. நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு ஏற்பாடு நிகழ்வுகளை, மாவட்ட ஆட்சியர் சங்கீதா,
மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், பேரூராட்சித் தலைவர்கள் சுமதிபாண்டியராஜன்,ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், செயல் அலுவலர்கள் பாலமேடு தேவி, அலங்காநல்லூர் ஜூலான்பானு, ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.மேலும், பார்வையாளர்கள் அமருமிடம், காளைகள் வரிசைப்படுத்தி நிறுத்துமிடம், வீரர்கள் பரிசோதனை செய்யக்கூடிய அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து, ஜல்லிக்கட்டு நேரத்தில் வரக்கூடிய பொதுமக்களுக்கும் பார்வையாளர்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் குடிநீர் உணவு உள்ளிட்ட பல்வேறு விதமான தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்று பேரூராட்சி மற்றும் ஜல்லிக்கட்டு நிர்வாக கமிட்டினரிடம்,மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.இந்த நிகழ்ச்சியில், வட்டார மருத்துவர் வளர்மதி ,கால்நடை உதவி மருத்துவர் விவேக், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமா ராஜன், மாவட்ட திமுக அவை தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர் தன்ராஜ், நகர் செயலாளர்கள் ரகுபதி. மனோகரவேல் பாண்டியன், பேரூராட்சி துணைத் தலைவர்கள் ராமராஜ். சாமிநாதன், பாலமேடு மகாலிங்க சுவாமி பொது மடத்துக்கு கமிட்டி தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதி தங்கமணி, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் ரகுபதி, கோவிந்தராஜ் ,திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் ,உள்ளிட்ட பல இந்த ஆய்வின் போது உடன் இருந்தனர்..
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









