தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி ஊராட்சி ஒன்றியம் குலசேகரன்பட்டினம் தருவைகுளத்தில்; ஜல்சக்தி அபியான் மற்றும் ஊருக்கு நூறு கை திட்டத்தின்கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் தூர்வாரும் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நேற்று (24.07.2019) நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, கலந்துகொண்டு, தூர்வாறும் பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் செம்மறிக்குளம் ஊராட்சி பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்புடன் 2000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தினையும் தொடங்கி வைத்தார்.பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் நமது மாவட்டத்தில் குளம், குட்டை, கண்மாய் தூர்வாறுதல், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துதல், மரக்கன்று நடுதல், கழிவு நீர் சுத்திகரித்து பயன்படுத்துதல் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்தல் உள்ளிட்டவைகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய நிலத்தடி நீர் ஆராய்ச்சி நிலையத்தின் அறிக்கையின்படி, நமது மாவட்டத்தில் நிலத்தடி நீர் மிகக்குறைவாக உள்ள 4 பிர்க்காக்கள் தேர்வு செய்யப்பட்டது.
இந்த 4 பிர்காக்களுக்கு உட்பட்ட 44 கிராம ஊராட்சிகளிலும் ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராம பகுதியில் உள்ள குளங்களை தூர்வாருதல், மழைநீரை சேமிப்பதற்கான தொட்டி, அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்று;ம் பெரு நிறுவனங்களில் மழைநீர் சேமிப்பதற்கான அமைப்புகளை ஏற்படுத்துதல், கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து விவசாயத்திற்கு பயன்படுத்துதல் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
நமது மாவட்டத்தில் ஜூன் 5ம் தேதி சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 13 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இன்று உடன்குடி ஒன்றியம் செம்மறிக்குளம் பகுதியில் சுமார் 2,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. இப்பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை ஏற்கனவே அலுவலர்கள் திட்டமிட்டுள்ளனர்.இன்று குலசேகரன்பட்டினம் தருவைகுளம் ஜல்சக்தி அபியான் திட்டத்தில் தூர்வாறி புனரமைக்கப்படுகிறது. இந்த நீர் குலசேகரன்பட்டினத்திற்கு குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. மேலும், இப்பகுதியில் உள்ள ஆடு, மாடுகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
நமது மாவட்டத்தில் அக்டோபர் மாதத்தில் இயல்பான மழையளவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பாக செப்டம்பர் மாதத்திற்குள் இப்பணிகளை மேற்கொண்டு முடித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தவுடன் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீரின் அளவில் முன்னேற்றம் அடையும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்ரியா, திருச்செந்தூர் வட்டாட்சியர் தில்லைப்பாண்டி, உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராணி, பானு, ஒன்றிய பொறியாளர் அருணாபிரதாயினி, தலைமை ஆசிரியர் (ஓய்வு) சிவபழனீஸ்வரன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் பெத்தராஜ், ஊராட்சி செயலர் அப்துல் ரசூல்தீன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









