சாமுவேல் என்றிச் சுகுவாபே (Samuel Heinrich Schwabe) அக்டோபர் 25, 1789ல் டெசாவ் ஜெர்மனியில் தேசாவு என்னுமிடத்தில் பிறந்தார். இவர் முதலில் இறையியலாளராக இருந்த இவர் பின்னர் வானியலில் கவனம் செலுத்தலானார். 1826ல் சூரியக்
கரும்புள்ளிகளை நோக்கிடலானார். இவர் வல்கான் எனும் கருதுகோள்நிலைக் கோள் ஒன்றைச் சூரியனுக்கும் அறிவன் புதன் கோளுக்கும் இடையில் கண்டுபிடிக்க முயற்சி எடுத்தார். அது சூரியனுக்கு மிக நெருக்கமாக உள்ளதால் அதை நோக்குதல் அரிதெனக் கருதினார். என்றாலும் அது சூரியனுக்கு முன்னால் கடக்கும்போது கரும்புள்ளியாகத் தோன்றும் என நம்பித் தன் ஆய்வைத் தொடர்ந்தார். இவர் 1826 முதல் 1843 வரை 17 ஆண்டுகள் ஒவ்வொரு நாளும் சூரியனை நோக்கி அதன் கரும்புள்ளிகளைப் பதிவு செய்யலானார். இவர் வல்கானைக் காணாவிடினும் சூரியக் கரும்புள்ளி வட்டிப்பைக் கண்டுபிடித்து “1843 இல் சூரியனின் நோக்கீடுகள் (Solar Observations during 1843)” எனும் ஆய்வுக் கட்டுரையில் தன் முடிவுகளை வெளியிட்டார். அதில் இக்கரும்புள்ளிகள் 10 ஆண்டுகளில் பெரும அளவை அடைகின்றன என முன்மொழிந்தார்.


You must be logged in to post a comment.