கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் இன்று மாலை பரவலாக காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது
இதனால் மேட்டுப்பாளையத்தில் பிரதான சாலையான ரயில் நிலையம் சாலையில் சிவன் தியேட்டர் அருகில் மிகப் பிரமாண்டமான மரம் ஒன்று சாலையின் நடுவே விழுந்துவிட்டது
இந்த சாலையை கடந்து தான் மேட்டுப்பாளையத்தில் மேற்குப் பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும் இதனால் மேட்டுப்பாளையம் காவல்துறை ஆய்வாளர் சின்னக்காமணன் தலைமையில் காவல்துறையினர்
பலத்த மழை இருக்கிடையே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தினார்கள் இதனால் அவ்வழியாக போக்குவரத்து சிறிது நேரத்தில் சீரானது
ஆய்வாளரின் துரிதமான நடவடிக்கைக்கு மேட்டுப்பாளையம் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
You must be logged in to post a comment.