தூத்துக்குடி வ.உ.சி.கோ – ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, துவக்கி வைத்தார்.தூத்துக்குடி வ.உ.சி. கோ – ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா இன்று (19.09.2019) நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்து மதுரை காட்டன் சேலைகள், காதா சேலைகள் உள்ளிட்ட புதிய ரகங்களை பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம்தெரிவித்ததாவது:தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸின் 30 சதவித தள்ளுபடியில் பல்வேறு விதமான ரகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. நமது மாவட்டத்தில் 2 விற்பனை நிலையங்களில் கடந்த வருட தீபாவளி பண்டிகை காலத்தில் ரூ.2.79 கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்றது. இந்த வருட தீபாவளிக்கு ரூ.3.15 கோடி விற்பனை குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடி வ.உ.சி. கோ-ஆப்டெக்ஸ் நிலையத்திற்கு ரூ.2.20 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மங்கையர் விரும்பும் மென்பட்டுச் சேலைகள், சுபமுகூர்த்த திருமண பட்டு சேலைகள், ஆர்கானிக் சேலைகள், பருத்தி சேலைகள், காட்டன் சேலைகள், படுக்கை விரிப்புகள்,சுடிதார் இரகங்கள், ரெடிமேட் சட்டைகள், வேட்டிகள், கைலிகள் ஆகியவை நவீன டிசைன்களில் உற்பத்தி செய்யப்பட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. மேலும்,இந்த வருட தீபாவளி பண்டிகைக்காக புதிய வரவாக மதுரை காட்டன் சேலைகள், காதா சேலைகள், காதா பெட்சீட் ரகங்கள், சம்பரே பெட்சீட் ரகங்கள் மற்றும் பாலிவிஸ்கோஸ் சூட்டிங் ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
மேலும், பிளாஸ்டிக் மாற்றாக துணியினால் செய்யப்பட்ட பர்ஸ்சுடன் கூடிய கேண்டு பேக், காட்டன் பேக் உள்ளிட்ட புதிய ரகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, கோ ஆப்டெக்ஸ் துணிகளை வாங்குவதால் இதன் மூலம் நெசவாளர்கள் குடும்பங்கள் பயன்பெறுகிறது. மேலும், நெசவாளர்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கு பொதுமக்கள் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் உள்ள புதிய ரகங்களை பார்வையிட்டு அதிக அளவில் வாங்க முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார். முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தீபாவளி சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை துவக்கி வைத்தார். முதல் விற்பனையை தூத்துக்குடி ரெங்கநாதபுரம் சி.எம்.பள்ளிகள் தாளாளர் வள்ளியம்மாள் திருச்சிற்றம்பலம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளர் இசக்கிமுத்து, தூத்துக்குடி வ.உ.சி. கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் கணபதி சுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









