தென்காசி அருகே நடந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சையை உறுதி செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்கு உள்ளாகி இருக்கிறேன். உடனடியாக, மாவட்டப் பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் அவர்களைத் தொடர்பு கொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அறிவுறுத்தி உள்ளேன். விபத்து நேர்ந்த இடத்திலிருந்து பேசிய மாவட்ட ஆட்சியரை, அரசு மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சையை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன். இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து உள்ளவர்கள் விரைந்து நலம்பெற அரசு துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.


You must be logged in to post a comment.