இராமநாதபுரம், ஆக.19- இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறந்த சமூக சேவையாற்றிய அரசின் பல்வேறு துறை பணியாளர் 10 பேர், தொண்டு நிறுவன நிர்வாகிகள் 5 பேருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.
இராமநாதபுரம் ஆய்வு மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சி வரி தாண்டவர் எஸ்.மங்களநாத சேதுபதி,பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சி தற்காலிக துப்புரவுப் பணியாளர் உடையார், பரமக்குடி நகராட்சி அலுவலக ஓட்டுநர் ராஜேந்திரன், பந்தப்பனேந்தல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை சரவண பூபதி, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியர் புவனி (,மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு சான்று பெற்றவர்), நயினார் கோயில் ஒன்றியம், பனிதவயல் அங்கன்வாடி பணியாளர் ரீட்டா ராமேஸ்வரம் மீன்வளத்துறை மேற்பார்வையாளர் நடேஷ்பாபு, ராமேஸ்வரம் போக்குவரத்து தலைமை காவலர் யுவராஜ், கமுதி தீயணைப்பு நிலைய வீரர் பழனி, ராமநாதபுரம் அப்பாஸ் அலி அறக்கட்டளை நிர்வாகி அமீர் ஹம்ஷா, ராமநாதபுரம் வள்ளலார் யுனிவெர்சல் மிஷன் டிரஸ்ட் நிர்வாகி ராஜவீர், Voice From Heart நிர்வாகி லிடியா, ராமேஸ்வரம் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்தில்லை பாக்கியம், பரமக்குடி தங்கம்மாள் ரஹீம் அறக்கட்டளை நிறுவனர் முஹமது அலி ஜின்னா ஆகியோரது சேவைகளை பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார். நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பா. விஷ்ணு சந்திரன் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









