கீழக்கரை நகராட்சிக்கும் சுகாதாரத்துக்கும் ஏழாம் பொருத்தமாகவே உள்ளது. கீழக்கரை பகுதியில் முறையான மேற்பார்வை இல்லாததால் சுகாதாரம் என்பது கனவாகவே உள்ளது. பல முறை புகார் செய்த பின் அந்த பகுதி சுத்தப்படுத்த படும், மீண்டும் சில நாட்களில் பழைய கதை தொடரும் நிலையே உள்ளது.
உதாரணமாக 3வது வார்டு பெத்திரி தெரு பகுதி சுகாதார கேட்டின் உச்ச நிலையில் உள்ளது. எங்கு திரும்பினாலும் சாக்கடை, குப்பை மேடுகள் என அப்பகுதி மக்கள் தொற்று நோய் பரவும் அபாயத்தில் உள்ளனர்.
பொதுமக்களுக்கும் சுற்றுப்புறத்தை பேண வேண்டிய கடமை உள்ளது என்றாலும், அதற்கான வாய்ப்பையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துவது நகராட்சியின் கடமை என்பதை நாம் புறந்தள்ளி விட முடியாது.






kuppaikali kuppai thittiyil poda katru kudungal makkalukku
///..குப்பைகளை குப்பை தொட்டியில் போட கற்று கொடுங்கள் மக்களுக்கு..///