சேதுக்கரை ஊராட்சிக்கு ரூ.5.50 லட்சம் மதிப்பிலான தூய்மை பணியந்திரம் வழங்கப்பட்டது
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் தூய்மை பணிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் இராமநாதபுரம் ஆனந்தா ஜவுளி நிறுவனம் சார்பில் ரூ.5.50 இலட்சம் மதிப்பீட்டில் தூய்மை பணிக்கான இயந்திரம் சேதுக்கரை ஊராட்சிக்காக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதிய தூய்மை பணியந்திரத்தை அதிகாரப்பூர்வமாக பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. கோவிந்தராஜலு, ஆனந்தம் சில்க்ஸ் நிறுவன உரிமையாளர் வேலன் சங்கரமூர்த்தி, சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், திருப்புல்லாணி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தவிஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இது போன்ற சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் தனியார் நிறுவனங்கள் அதிகரிக்க வேண்டும் என்றார் . தூய்மையான சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் வழங்கப்பட்ட இந்த இயந்திரம், ஊராட்சி நிர்வாகத்துக்கு ஒரு பெரும் ஆதரவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
சேதுக்கரை ஊராட்சியில் இந்த இயந்திரம் மூலம் சுமை குறைக்கப்படும் வேலை திறனை அதிகரிக்கவும், என ஊராட்சி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த உதவி, மக்கள் நலனில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடியது என பலரும் பாராட்டியுள்ளனர்.