நெல்லையில் முக்கிய இடங்களில் சாதி அடையாளங்கள் அழிக்கும் பணி..

திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் மாவட்ட காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து சாதிய அடையாளங்கள் அழிக்கும் பணியை மேற்கொண்டனர். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன் உத்தரவின்படி மாவட்ட காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து சாதி அடையாளங்களை அழிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கட்டுடையார் குடியிருப்பு பகுதியில் 24 மின்கம்பங்களிலும்,களக்காடு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட சிதம்பராபுரம், புதுதெரு பகுதிகளில் 20 மின்கம்பங்கள், 1 தண்ணீர் தேக்க தொட்டி, 3 சுவர்களிலும், திருக்குறுங்குடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட தெற்குமாவடி, கட்டளை புதுதெரு பகுதிகளில் 10 மின்கம்பங்கள், 1 சுவரிலும் இன்று ஒரே நாளில் 59 இடங்களில் ஊர்த்தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து சாதிய அடையாளங்களை வண்ணம் பூசி அழித்தனர்.

முன்னதாக, தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வண்ணாம்பச்சேரி பகுதியில் 4 மின்கம்பங்கள், 1 சுவரிலும், வீரவநல்லூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வல்லத்து நம்பிகுளம் பகுதியில் 20 மின்கம்பங்கள், 1 பாலம், 15 மரங்கள், 3 மைல்கல்களிலும், மூன்றடைப்பு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட ஆ. சாத்தான்குளம், ஆழ்வானேரி, உலகம்மாள்புரம், தோப்பூர் பகுதிகளில் 47 மின்கம்பங்களிலும் ஒரே நாளில் 111 இடங்களில் ஊர்த்தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து சாதிய அடையாளங்களை வண்ணம் பூசி அழித்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!