இராமநாதபுரம், அக்.2-
இராமநாதபுரம் ரயில் நிலையத்தில் விவேகானந்தா பள்ளி மாணவர்கள், தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். சுத்தம் செய்த இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அரு.சுப்ரமணியன் மரக்கன்று வழங்கினார். மாணவர்களுக்கு சேவை சான்று, தூய்மை பணியாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
மண்டபம் மேற்கு ஒன்றிய பாஜக சார்பாக தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் தேர்போகி கிருஷ்ணர் கோயில் வளாகத்தில் தூய்மை பணி நடந்தது. மாவட்ட தலைவர் தரணி முருகேசன், ஓபிசி அணி மாநில செயலாளர் முருகன், மீனவரணி மாநில செயலாளர் நம்புராஜன், கன்னியாகுமரி பெருங்கோட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் பரமேஸ்வரன் மாணிக்கம், அமைப்பு சாரா பிரிவு மாவட்ட தலைவர் நந்தகுமார், திருப்புல்லாணி ஒன்றிய பொதுச்செயலாளர் முனியசாமி , மாவட்ட நிர்வாகி புதுவலசை சரவணன், ஒன்றிய பொதுச்செயலாளர் மலைச்சாமி, ஒன்றிய பொருளாளர் சங்கர், மூத்த நிர்வாகிகள் பழனிச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பால்கரசு, வீரபாகு, ஒன்றிய செயலாளர் பழனிக்குமார், தரவு மேலாண் பிரிவு ஒன்றிய தலைவர் விஜய், இளைஞரணி தலைவர் ராம்கிதாஸ், இளைஞரணி நிர்வாகி சரவணன் மற்றும் பாஜக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









