ஆடு மேய்ப்பதில் இரு தரப்பினர் மோதல் இரு பெண் உட்பட 20 பேருக்கு வெட்டு…

இராமநாதபுரம் மாவட்டம்  கமுதி அருகே ஆசூரைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது ஆடுகளை அங்குள்ள நிலங்களில் மேய்த்து வருகிறார்.  முனியசாமியின் ஆடுகள், பாண்டி நிலத்தில் பருத்தி செடிகளை  மேய்ந்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த பாண்டி, அவரது மகன் ஆனந்த் ஆகியோர் முனியசாமியை தாக்கினர்.

இது தொடர்பாக இரு தரப்பினரும், அரிவாள், கத்தி கம்பு, விறகு கட்டையால் மோதிக் கொண்டனர். இதில் பாண்டி தரப்பைச் சேர்ந்த மாரிச்சாமி 40, காந்தி மகன்கள் பவுன்ராஜ் 25, சிவன்ராஜ், ஞானகுரு 41, திருமால் 45, முருகவேல் 45, முனியசாமி தரப்பைச் சேர்ந்த செல்வராணி 45, மகாராஜா மனைவி செல்வி 22, முத்துக்குமார் 46, முனியாண்டி 47, வேலு 70, நாகராஜ் மகன் முத்துசெல்வம் 17, செல்வம் மகன் முனியசாமி 22, உட்பட 14 பேர் காயமடைந்தனர். இதில் காயமடைந்த திருமால், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லபட்டார். கமுதி இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் வழக்கு பதிந்து, விசாரித்து வருகிறார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!