*மேட்டுப்பாளையம் நகராட்சி தூய்மை பணி ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்ய CITU தொழிற்சங்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் மனு*
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள TECTUS INFRA Pvt லிமிடெட் என்ற நிறுவனம் கடந்த 2024 ஆம் ஆண்டு ஒப்பந்தம் எடுத்திருந்தது மேற்படி ஒப்பந்த நிறுவனத்திடம் சுமார் 180 க்கு மேற்பட்ட ஆண் பெண் உட்பட தூய்மை பணியாளர்கள் மேட்டுப்பாளையம் நகர பகுதியில் தூய்மை பணியை மேற்கொண்டு வந்தனர் மேற்படி தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ESI. EPF
தொகையை தொழிலாளர்களின் கணக்கில் வரவு வைக்காததால் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடமிருந்து
தங்களுக்கு வரவேண்டிய இஎஸ்ஐ பி எப் தொகையை
பெற்றுத் தர வேண்டி பல கட்ட போராட்டங்களை நடத்தினார்கள் இதனால் மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தினால் சுகாதார சீர்கேடும் நிலை ஏற்பட்டது வட்டாட்சியர் காவல்துறை நகராட்சி நிர்வாகம் தொழிற்சங்க பிரதிநிதிகளை கொண்ட சமூக பேச்சுவார்த்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது அந்தப் பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் முன்னிலையில் ஒப்பந்ததாரர் 26 .12 .2024 அன்று தொழிலாளர்களிடம் பிடித்து வைத்த இ எஸ் ஐ .பி எப் தொகைகளை தொழிலாளர்களுக்கு வழங்கி விடுவதாக கூறினார் இதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து தங்கள் பணிகளை மேற்கொண்டு வந்தனர்
இதற்கிடையில் கடந்த ஒரு வருடமாக தூய்மை பணியாளர்களிடம் பிடித்தம் செய்த முறையாக வழங்க வேண்டிய ஏறத்தாழ 50 லட்ச ரூபாய் தொகையை தூய்மை பணியாளர்களுக்கு வழங்காமல் அந்த நிறுவனம் ஒப்பந்த பணியை நிறுத்திவிட்டு சென்று விட்டார்கள் இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்பந்த தூய்மை பணியாளர் தங்களுக்கு வரவேண்டிய தொகையை தரக்கோரி கோரிக்கை வைத்த போது சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் தொகை உள்ளது பெற்று தருவதாக கடந்த மூன்று மாதமாக கூறி வருகிறார்கள் தற்போது வரை தொழிலாளர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய இ எஸ் ஐ பி எஃப் போன்ற தொகைகள் வழங்கப்படவில்லை மேலும் அடுத்த மாதம் வேறொரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விடுவதாகவும் தகவல் வந்துள்ளது ஆகவே மேற்படி தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையுடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பங்குத் தொகையும் இணைத்து மேற்படி தொழிலாளர்களுக்கு வழங்குவதோடு மேற்படி தொழிலாளர்களின்
ஒரு வருட இ எஸ் ஐ பி எப் தொகையை தராமலும் தொழிலாளர்களையும் அரசு அதிகாரிகளை ஏமாற்றி வரும் ஒப்பந்ததாரர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மேட்டுப்பாளையம் தாலுகா சிஐடியு பொது தொழிலாளர் சங்கம் சார்பில் அதன் நிர்வாகி S. பாஷா. நாகராஜ்.சானவாஸ். முகமது அலி ஜின்னா. உள்ளிட்டோர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்


You must be logged in to post a comment.