இராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் குடிநீர் மேல்நிலை தொட்டி (டேங்க் ஆப்பரேட்டர்) மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த ஏழாவது ஊதியக்குழு மற்றும் சம்பள நிலுவைத்தொகையை வழங்க வலியுறுத்தி உதவி இயக்குநர் ஊராட்சிகள், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து நிலுவை தொகை முழுமையாக வழங்கப்படவில்லை. இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு 4 முறை போராட்டத்திற்கு பிறகும், மாவட்டத்தில் சில ஊராட்சிகளில் மட்டும் நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருப்புல்லாணி, கடலாடி, பரமக்குடி , நயினார் கோவில், ஆர்எஸ் மங்கலம் / திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் முறையிட்டு இது வரை முறையாக புதிய சம்பளம் நிலுவை தொகை வழங்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று (17.6.19) ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் (சிஐடியு ) சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ.சந்தானம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எம். அய்யாத்துரை மாவட்ட பொருளாளர் கே.மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முறையாக கணக்கிட்டு ஏழாவது ஊதியக்குழு மற்றும் சம்பள நிலுவை தொகையை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஜூன் மாத இறுதிக்குள் வழங்க உத்தரவிட வேண்டும், ஆபரேட்டர் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் ஓய்வு பெறும் போது பணி நிறைவு உத்தரவு வழங்க வேண்டும்,
துப்புரவு தொழிலாளர்கள் பணி நிறைவு பெற்ற பிறகு அரசு அறிவித்த கருணை தொகை ரூ. 50 ஆயிரம், மாத ஓய்வு ஊதியம் ரூ. 2 ஆயிரம் உடனே வழங்க வேண்டும், கூடுதலாக நீர் தேக்க தொட்டிகளை இயக்கும் ஆபரேட்டர்களுக்கு நீர்தேக்கத் தொட்டி ஒன்றுக்கு மாதம் ரூ.500 வழங்க வேண்டும், நீர்த்தேக்கத் தொட்டியை மாதம் ஒரு முறை சுத்தம் செய்ய ரூ. ஆயிரம் வழங்க வேண்டும், ஊராட்சிகளில் குடிநீர் குழாய்கள் உடைப்பை சரி செய் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும், துப்புரவு தொழிலாளர்களுக்கு மண்வெட்டி, சீருடை, கையுறை, துடைப்பான் உடனே வழங்க வேண்டும்ஊராட்சி ஆபரேட்டர் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு மாதம் 5ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும், டேங்க் ஆபரேட்டர் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள 11 10 17ஆம் தேதிக்கு பிறகு அரசு அறிவித்த அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












