கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மேட்டுப்பாளையம் தாலுக்கா சி ஐ டி யு பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
மேட்டுப்பாளையத்தை சார்ந்த பொது மக்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு வழங்கப்பட்ட பட்டா இடத்தை அளந்து தரக் கோரியும் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடங்களில் வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்த தகுதியான பயனாளிக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரியும் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு நீண்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்
வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இடத்தில் மேட்டுப்பாளையம் தாலுகா வட்டாட்சியர் ராம்ராஜ், மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சின்ன காமணன், தனி வட்டாட்சியர்கள் செல்வராஜ், சங்கர்லால் நில வருவாய் ஆய்வாளர் கற்பகம், கிராம நிர்வாக அலுவலர் ஹரிஹரன் ஆகியோரும் மேட்டுப்பாளையம் தாலுகா பொதுச் செயலாளர் பாஷா, சம்சுதீன், சானவாஸ், முகமது அலி ஜின்னா, ஹபிபுல்லா, சாமுவேல், சத்யா, கனகமணி, மூத்த நிர்வாகிகள் சித்திக் மற்றும் பெருமாள் சி ஐ டி யு மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நீண்ட நேரம் ஆகியது மேலும் தொழிலாளர்கள் தங்களின் காத்திருப்பு போராட்ட நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது இதன்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்